/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தன்னார்வலர்களுக்கு லேப்டாப் வழங்கல்
/
தன்னார்வலர்களுக்கு லேப்டாப் வழங்கல்
ADDED : ஆக 08, 2025 01:39 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சியில், மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கான சேவைகள் மற்றும் நலத்திட்டங்களை செய்திட, தன்னார்வலர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் சார்பாக, தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு துவங்கப்பட்டதன் தொடர்ச்சியாக, அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சியில் உள்ள, மாற்றுத்திறனாளிகளை கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. இப்பணிகளை மேற்கொள்ள தன்னார்வலர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி மணிகண்டன், தன்னார்வலர்களுக்கு லேப்டாப்களை வழங்கினார். இதேபோல பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர் ஜான் மற்றும் கமிஷனர் ஆர்த்தி ஆகியோர், தன்னார்வலர்களுக்கு வழங்கினர்.