/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து வழங்கல்
/
குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து வழங்கல்
குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து வழங்கல்
குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து வழங்கல்
ADDED : நவ 16, 2024 01:23 AM
குழந்தைகள் வளர்ச்சி திட்டம்
சார்பில் ஊட்டச்சத்து வழங்கல்
கரூர், நவ. 16-
கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், ஊட்டச்சத்தை உறுதி செய் என்ற வகையில், இரண்டாம் கட்ட தொடக்க விழா, காந்தி கிராமம் நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.
அதில், கடுமையான ஊட்டச்சத்து உள்ள தாய்மார்களுக்கு, இரண்டாம் கட்டமாக ஊட்டச்சத்து பெட்டகத்தையும், 1,297 குழந்தைகள் கண்டறியப்பட்டு, புரோட்டீன் பவுடர், ஆவின் நெய், பேரிச்சம் பழம், மல்டி வைட்டமின் மருந்து, குடற்புழு நீக்க மாத்திரை உள்ளிட்ட பொருட்களை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.
விழாவில், எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுவாதி, மண்டல குழு தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் பூபதி, தியாகராஜன், தங்கராஜ் உள்பட பலர் பலர் பங்கேற்றனர்.