/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.19.57 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.19.57 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 15, 2024 04:01 AM
கரூர்: பயனாளிகளுக்கு, 19.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்,
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு நிதி உதவிகள், உபகரணங்களை கலெக்டர் தங்கவேல் வழங்கினார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக திருநங்கையர் சுயதொழில் செய்திடும் வகையில் ஐந்து திருநங்கைகளுக்கு முழு மானியமாக, 1.29 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதி உதவிகளும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 5 பயனாளிகளுக்கு, 4.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 4 பயனாளிகளுக்கு, 4.53 லட்சம் ரூபாய் மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதித்த நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 8 பயனாளிகளுக்கு, 8.40 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீல்சேர்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு 53,396 ரூபாய் மதிப்பீட்டிலான திறன் பேசிகளும் என மொத்தம், 26 பயனாளிகளுக்கு, 19.57 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சப் - கலெக்டர் சைபுதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

