/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளி எதிரில் குப்பை எரிப்பு பொதுமக்கள் பாதிப்பு
/
பள்ளி எதிரில் குப்பை எரிப்பு பொதுமக்கள் பாதிப்பு
ADDED : ஏப் 20, 2025 01:47 AM
கரூர்:
கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. வாங்கல், குப்பிச்சிபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளியின் அருகே, பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இங்கிருந்து வேன்களில் ஏற்றி செல்லப்பட்டு வாங்கல் சாலையில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்பட வேண்டும். சில நேரங்களில் பள்ளி எதிரில் கொட்டப்படும் குப்பை தீயிட்டு எரிக்கப்படுகிறது.
இவ்வாறு, குப்பை எரிக்கும் போது வெளிப்படும் புகை, நுண்ணிய துகள், மற்றும் நச்சுப் புகை மனிதர்களின் உடல்நலத்தை மோசமாகப் பாதிக்கின்றன. ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, சுவாச நோய்த்தொற்றுகள் பிரச்சினை ஏற்படுகின்றன. அதிலும், பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து வரும், 'டையாக்சின்' நச்சுப்புகையால் கண் எரிச்சல், தோல் நோய் மற்றும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து குப்பை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

