ADDED : நவ 23, 2026 06:54 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம்
அடுத்த லாலாப்பேட்டை, சந்தைப்பேட்டை வழியாக சிந்தலவாடி மாரியம்மன்
கோவில் வரை செல்லும் தார்ச்சாலை உள்ளது. இந்த சாலையை, அப்பகுதி
மக்கள் பிரதானமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,
சிந்தலவாடி மாரியம்மன் கோவில் பழைய அன்னை இந்திரா பள்ளி அருகே உள்ள
காலி இடங்களில், அதிகளவில் குப்பை கொட்டி குவித்து வைத்துள்ளனர்.
அவற்றை முறையாக அள்ளாததால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
இதனால் குடியிருப்பு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
எனவே,
இந்த சாலையோரம் கொட்டி குவித்துள்ள குப்பையை முழுமையாக அகற்ற,
பஞ்., துாய்மை பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை
எழுந்துள்ளது.
