ADDED : மே 19, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை உரிமம் ஏலம் நடந்தது.
குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவிலில், வழிபாட்டு
பொருள் விற்பனை கடை பொது ஏலம் கேட்பவர்கள், 50,000 ரூபாய் முன் பணம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இந்த பொது ஏலத்திற்கு, கோவில் செயல் அலுவலர் தீபா முன்-னிலை வகித்தார். தான்தோன்றிமலை உதவி ஆணையர் இளைய-ராஜா தலைமை வகித்தார். ஏலத்தில், மூவர் முன்பணம் செலுத்தி ஏலம்
எடுத்தனர்.
பிரசாதம் விற்பனை கடை உரிமத்தை, பாக்கியலட்சுமி என்பவர், மூன்று லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதையடுத்து, நிர்-வாகம் அறிவிக்கப்பட்ட விலைப்பட்டியல்படி, பொருட்கள் விற்-பனை செய்யவேண்டும் என, அறிவுரை வழங்கப்பட்டது.