ADDED : ஏப் 18, 2025 01:56 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:
குளித்தலை அடுத்த, தோகைமலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமை வகித்தார். கள்ளை கிராமத்தில், ஆப்பிள் கிரானைட்ஸ் நிறுவனத்தின் பலவண்ண கிரானைட் குவாரி திட்டம் குறித்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் சமூகஆர்வலர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கிரானைட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூக ஆர்வலர் முகிலன் பேசினார். தோகைமலை, கூடலுார் கிராமங்களில் இருந்து, சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்து பேசினர்.
