தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை


ADDED : ஆக 11, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர்-கோவை சாலையில், சின்னதாராபுரம் பிரிவு உள்ளது. இந்த வழியாக நாள்தோறும் ஏராளமான லாரி, பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள், தாராபுரம், பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று

வருகின்றன.

இதனால், சின்னதாராபுரம் பிரிவில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் போலீசார், சின்னதாராபுரம் பிரிவில் பணியில் இருப்பது இல்லை. இதனால், அப்பகுதியில் விபத்து ஏற்படும்பட்சத்தில், கோவை சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

இதனால், சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், கோரிக்கையை கண்டு

கொள்ளவில்லை.

இதுகுறித்து, சின்னதாராபுரம் பிரிவு பகுதி மக்கள் கூறியதாவது:

கோவை சாலை, சின்னதாராபுரம் பிரிவு பகுதியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல்வேறு கிராமப்பகுதிகளில் இருந்து, செல்லும் பொதுமக்கள் சின்னதாராபுரம் பிரிவு வழியாக, பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றனர். அப்போது, கோவை சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. இதனால், சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us