/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை பஸ் ஸ்டாண்டில் கட்சி கூட்டம் நிரந்தர தடைவிதிக்க பொதுமக்கள் கோரிக்கை

ADDED : மார் 17, 2025 04:14 AM
குளித்தலை : குளித்தலை பஸ் ஸ்டாண்டில், அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்த நிரந்தரமாக தடைவிதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குளித்தலை நகராட்சியின், தற்காலிக பஸ் ஸ்டாண்ட் மிகவும் குறுகிய இடத்தில், அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்-பட்டு வருகிறது. இந்த பஸ் ஸ்டாண்டில் திருச்சி, கரூர், கோவை மார்க்கமாக அரசு, தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், மதுரை, திண்டுக்கல், மணப்பாறை, முசிறி, பெரம்பலுார், துறையூர், சேலம் மார்க்கம் பஸ்கள், தரகம்பட்டி, கடவூர் உள்-ளிட்ட பல பகுதிக்கு செல்லும் பஸ்கள் வந்து செல்கின்றன.
குறுகலான இடம்
மேலும், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் வாடகை கார், ஆட்டோ நிறுத்தப்பட்டுள்ளன. இதெல்லாம் போதாது என, பற்றாக்கு-றைக்கு அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள்
அவ்வப்போது நடந்து வருகின்றன. இதனால் குறுகலான இடத்தில் பஸ் டிரைவர்கள், பொதுமக்கள் வந்து செல்ல கடும் சிர-மத்துக்குள்ளாகின்றனர்.
தடை விதிக்க வேண்டும்
எனவே, மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள், பஸ் டிரைவர்கள் பாதிக்காத வகையில், குளித்தலை பஸ் ஸ்டாண்டில் அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்த நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.