/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொட்டியை சுற்றி செடி, கொடி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
/
தொட்டியை சுற்றி செடி, கொடி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தொட்டியை சுற்றி செடி, கொடி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
தொட்டியை சுற்றி செடி, கொடி அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
ADDED : நவ 29, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், நவ. 29-
கரூர் தொழிற்பேட்டையில் உள்ள சின்டெக்ஸ் தொட்டியை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.
கரூர்,- திருச்சி பழைய சாலையில் பசுபதிபாளையம் அருகில் தொழிற்பேட்டை பகுதியில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. தற்போது தொட்டி சேதமடைந்துள்ளது. மேலும், தொட்டியை சுற்றி வடிகால் வசதி இல்லாததால், கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் செடி, கொடி படர்ந்துள்ளதால், பொதுமக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். போர்வெல் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, புதிய சின்டெக்ஸ் தொட்டி மற்றும் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.