/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தாழ்வாக உள்ள சாக்கடை கால்வாய் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
தாழ்வாக உள்ள சாக்கடை கால்வாய் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தாழ்வாக உள்ள சாக்கடை கால்வாய் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தாழ்வாக உள்ள சாக்கடை கால்வாய் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 17, 2025 02:44 AM
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர், இனாம் கரூர் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், தான்தோன்றிமலை, சணப்பிரட்டி பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது. மேலும், தான்தோன்றிமலை, சணப்பிரட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சில இடங்களில் செல்லும் வடிகால்கள் மிகவும் உயரம் குறைவாக உள்ளது.
இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர், கழிவுநீருடன் சேர்ந்து கொண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்கிறது. இதனால், துர்நாற்றம், தொற்று நோய் பரவல் உள்பட பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தாழ்வாக உள்ள பகுதி-களில் உள்ள சாக்கடை வடிகால்களை மேம்படுத்த வேண்டும் என, இப்பகுதியினர் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வரு-கின்றனர். உடனடியாக சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.