/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நன்னியூர் புதுாரில் பயணிகள் நிழற்கூடம் சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ADDED : அக் 02, 2025 01:37 AM
கரூர்:கரூர் அருகே சேதமடைந்துள்ள, பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்டம், நன்னியூர் புதுாரில் அரசு தொடக்கப்பள்ளி, கோவில்கள் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதனால், பல ஆண்டுகளுக்கு முன், நன்னியூர் புதுார் பிரிவில், பஸ் ஸ்டாப்பில் பயணிகள் வசதிக்காக, நிழற்கூடம் அமைக்கப்பட்டது. பயணிகள் மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியரை பஸ்களில் அழைத்து செல்கின்றனர்.
இந்நிலையில், சில மாதங்களாக பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் நிழற்கூடத்தில் பயணிகள், மாணவ, மாணவியர் நிற்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, கரூர் அருகே நன்னியூர் புதுார் சாலை பிரிவு பஸ் ஸ்டாப்பில், சேதமடைந்துள்ள பயணிகள் நிழற்கூடத்தை சீரமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் பஞ்., யூனியன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.