/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பூங்காவில் பூட்டப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
/
பூங்காவில் பூட்டப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
பூங்காவில் பூட்டப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
பூங்காவில் பூட்டப்பட்ட புறக்காவல் நிலையம் மீண்டும் திறக்க பொது மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 16, 2025 07:35 AM
கரூர்: மாயனுார் கதவணை பகுதியில் உள்ள, 'அம்மா' பூங்காவில் புறக்காவல் நிலையம் பூட்டப்பட்டுள்ளது. அதை நாள்தோறும் திறக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.கரூர் மாவட்டம், மாயனுாரில் காவிரியாற்றின் குறுக்கே, 1.5 டி.எம்.சி., தண்ணீர் தேக்கி வைக்க கதவணை கட்டப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், காட்டுபுத்துார், நாமக்கல் மாவட்டம், மோகனுார், பரமத்தி வேலுார் பகுதி பொதுமக்கள், கார், இருசக்கர வாகனங்கள் மூலம், கதவணையை பார்க்க சென்று வருகின்றனர்.
அரசு பஸ்களும் கதவணை சாலை வழியாக இயக்கப்படுகிறது. மேலும், காவிரியாற்றின் கரையோர பகுதியில் உள்ள, செல்லாண்டி அம்மன் கோவில், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் கட்டப்பட்ட, 'அம்மா' பூங்காவுக்கும் பொதுமக்கள் செல்கின்றனர்.இதனால், 'அம்மா' பூங்கா நுழைவுவாயில் பகுதியில், பொதுமக்கள் பாதுகாப்புக்காக மாயனுார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. ஆனால், புறக்காவல் நிலையம் பெரும்பாலும் திறக்கப்படுவது இல்லை. இதனால், பூங்காவில் தகராறு ஏற்படும்பட்சத்திலும், காவிரியாற்றில் பொதுமக்கள் தண்ணீர் அடித்து செல்லப்படும்போதும், 4 கிலோ மீட்டர் துாரம் உள்ள, மாயனுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க செல்ல வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக, நேற்று ஞாயிற்று கிழமை பொது விடுமுறை என்பதால், ஏராளமான பொது மக்கள் கதவணை மற்றும் அம்மா பூங்காவில் குவிந்தனர். ஆனால், புறக்காவல் நிலையம் திறக்கப்படாமல், பூட்டு போடப்பட்டிருந்தது. தற்போது, மேட்டூர் அணையில் குறுவை சாகுபடிக்கு, காவிரியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.அதை பார்த்து ரசிக்கவும் பொதுமக்கள், கதவணை வரும்போது, அம்மா பூங்காவுக்கும் செல்கின்றனர். எனவே, மாயனுார் கதவணை, அம்மா பூங்காவில் புறக்காவல் நிலையத்தை நாள்தோறும் திறந்து, போலீசாரை பணியில் அமர்த்த, கரூர் மாவட்ட காவல்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.