/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
திறந்த நிலையில் குடிநீர் வால்வு தொட்டி: பொதுமக்கள் அச்சம்
/
திறந்த நிலையில் குடிநீர் வால்வு தொட்டி: பொதுமக்கள் அச்சம்
திறந்த நிலையில் குடிநீர் வால்வு தொட்டி: பொதுமக்கள் அச்சம்
திறந்த நிலையில் குடிநீர் வால்வு தொட்டி: பொதுமக்கள் அச்சம்
ADDED : ஜூலை 21, 2025 07:59 AM
கரூர்: கரூர் அருகே, குடிநீர் வால்வு தொட்டி, பல மாதங்களாக திறந்த நிலையில் உள்ளது. இதனால், அப்பகுதி யில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
கரூர் - சேலம் பழைய சாலை வாங்கப்பாளையத்தில், குடிநீர் வால்வு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், அப்பகுதிக்கு மாநகராட்சி சார்பில், குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், பல மாதங்களாக குடிநீர் வால்வு தொட்டி திறந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளதால், குடிநீர் வால்வு தொட்டியை, சிலாப் கற்கள் மூலம் மூட வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த, பொதுமக்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் கோரிக்கை வைத்தும் கண்டுகொள்ளவில்லை.
இதனால், வாங்கப்பாளையத்தில் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, அந்த பகுதியில் வீடுகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள், அரசு பள்ளி, கோவில் உள்ளதால், அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. எனவே, கரூர் - சேலம் பழைய சாலை வாங்கப்பாளையத்தில் உள்ள குடிநீர் வால்வு தொட்டியை, சிலாப்கற்கள் மூலம் மூட கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.