sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புதிய உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

/

புதிய உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

புதிய உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

புதிய உயர்மட்ட பாலத்துக்கு இணைப்பு சாலை: பொதுமக்களிடம் கருத்து கேட்பு


ADDED : ஜன 31, 2026 06:14 AM

Google News

ADDED : ஜன 31, 2026 06:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, உயர்மட்ட பாலத்துக்கு, இணைப்பு சாலை அமைப்பது தொடர்பாக, நெடுஞ்சாலை துறை சார்பில், பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடந்தது.

கரூர் மாவட்டம், கோயம்பள்ளி-மேலப்பா-ளையம் இடையே, அமராவதி ஆற்றின் குறுக்கே கடந்த, 2011-16ல், அ.தி.மு.க., ஆட்சியின் போது, உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. ஆனால், இரண்டு பக்கமும் இணைப்பு சாலை அமைக்கப்ப-டாததால், பாலத்தை பொதுமக்களால் பயன்ப-டுத்த முடியவில்லை.

இதனால், பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்றனர். நமது நாளிதழிலும், புதிய பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என செய்தி வெளி-யானது.இந்நிலையில் நேற்று, மேலப்பாளையத்தில் முச்சிலியம்மன் கோவில் திருமண மண்ட-பத்தில், பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்-பது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம், திருச்சி மாவட்ட உதவி ஆட்சியர் (நிலம் எடுப்பு) சர-வணன் தலைமையில் நடந்தது.

அதில், பங்கேற்ற பொதுமக்கள் விரைவாக, பாலத்துக்கு இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என, மனு அளித்தனர்.

கூட்டத்தில், டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) ரம்யா தேவி, ஈரோடு கோட்ட நெடுஞ்சாலை துறை பொறியாளர் முருகேசன் உள்பட பலர் பங்கேற்-றனர்.






      Dinamalar
      Follow us