/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தார்ச்சாலை சீரமைப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி
/
தார்ச்சாலை சீரமைப்பு பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 21, 2025 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர்-திருச்சி சாலை, ஆண்டாங்கோவில் பிரிவு வழியாக, உழவர்சந்தை, அரசு உயர்நிலை பள்ளி, கோவில், மருத்துவமனைகளுக்கு, பொதுமக்கள் டூவீலர், கார் உள்ளிட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மேலும், அந்த பகுதியில் ஏராளமான வீடுகளும் உள்ளன. இந்நிலையில், கரூர் ஆண்டாங்கோவில் பிரிவு சாலையில், பல இடங்களில் குண்டும், குழியுமாக இருந்தது. இதுகுறித்து, நம் நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று குண்டும், குழியுமான சாலைகள் சீரமைக்கப்பட்டன. இதனால், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.