/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற்கூட்டம்
/
போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற்கூட்டம்
போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற்கூட்டம்
போக்குவரத்து ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் வாயிற்கூட்டம்
ADDED : செப் 20, 2024 02:30 AM
கரூர்: கரூர், திருமாநிலையூரில் உள்ள போக்குவரத்து பணிமனை முன், ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற்கூட்டம் நேற்று நடந்தது.
மண்டல தலைவர் பூபதி தலைமை வகித்தார். இதில், நான்கு ஆண்டுகள் முடிந்த பின், ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல், தமிழக அரசு இழுத்தடிப்பு செய்கிறது. போக்குவரத்து கழக பணியாளர்களை, ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்வதை கைவிட வேண்டும். 2022 முதல் ஓய்வூதியர்களின் பண பலன்களை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.கூட்டத்தில் இ.கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாநில சம்மேளன துணை பொதுச்செயலாளர் முருகராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.