/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சமூகத்தை தரம் தாழ்த்தி விமர்சனம் எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் மனு
/
சமூகத்தை தரம் தாழ்த்தி விமர்சனம் எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் மனு
சமூகத்தை தரம் தாழ்த்தி விமர்சனம் எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் மனு
சமூகத்தை தரம் தாழ்த்தி விமர்சனம் எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் மனு
ADDED : நவ 28, 2024 01:09 AM
சமூகத்தை தரம் தாழ்த்தி விமர்சனம்
எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் மனு
ஈரோடு, நவ. 28-
பெருந்துறை, தென்முகம் வெள்ளோடு ராக்கியம்பாளையம் கிருஷ்ண
மூர்த்தி தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று ஈரோடு
எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
பெருந்துறை தாலுகா, வடமுகம் வெள்ளோட்டில் உள்ள சுயம்பு மாரியம்மன் கோவில் விழாவை, பல நுாற்றாண்டாக ஆறுகரை கொங்கு நாடார் குல கொத்துக்காரர்கள், ஆறுகரை கொங்கு நாடார் குல மக்கள் கார்த்திகையில் நடத்தி வருகின்றனர். கோவில் ஹிந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் உள்ளது. கடந்த, 26ல் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. டிச., 13 வரை நடக்கிறது. ஆறுகரை கொங்கு நாடார் சமூகத்தினரிடம் இருந்து மட்டும், வரி வசூலித்து விழா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். இந்நிலையில், பொது அமைதியை குலைக்கும் நோக்கில் பெண் ஒருவர், பேசுவதாக வீடியோவை தயார் செய்து, சமூக வலைதளங்களில் பரவ செய்துள்ளனர். அதில், ஆறுகரை கொத்துக்காரர்களை தரம் தாழ்த்தி, உண்மைக்கு புறம்பாகவும், தகாத வார்த்தைகளால் வேண்டும் என்றே பல பொய்யான சங்கதிகளை சித்தரித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ கலவரத்தை துாண்டும் விதமாக உள்ளது. எனவே, இதற்கு காரணமானவர் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.