/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
/
ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு
ADDED : நவ 18, 2024 03:38 AM
குளித்தலை: மத்தகிரி கிராமத்தில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள், இடத்தை பார்வையிட வந்த கலெக்டர், சிப்காட் எம்.டி., ஆகியோரிடம் மனுக்களை அளித்-தனர்.
குளித்தலை அடுத்த மத்தகிரி கிராமத்தில், ஜவுளி பூங்கா அமைக்க விவசாய நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஆனால், இடம் தேர்வு செய்யப்-பட்டதில் இருந்தே, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரு-கின்றனர். இதேபோல், நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து, மத்தகிரி பஞ்., தலைவர் தங்கராசு தலைமையில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்-டது. மேலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கடந்-தாண்டு நவ., 22ல் தரகம்பட்டியில் உள்ள கடவூர் தாசில்தார் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்நிலையில், பஞ்., கோரிமேடு பகுதியில், பாளையம் முதல் திருச்சி நெடுஞ்சாலையில் இருந்து, திருச்சி மாவட்டம், வையம்-பட்டி ஒன்றியம், இனாம்புதுார் பஞ்., பகுதிகளை மையமாக கொண்டு தமிழ்நாடு அரசு கைத்தறி தொழில் பூங்கா அமைக்க உள்ள இடங்களை, கரூர் கலெக்டர் தங்கவேல், சிப்காட் எம்.டி., செந்தில்ராஜ் ஆகியோர் பார்வையிட வந்தனர்.
அப்போது அங்கு வந்த மக்கள், ஜவுளி பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் தங்கவேல், சிப்காட் எம்.டி., செந்தில்ராஜ் ஆகியோரிடம் மனுக்களை அளித்தனர். இதனால்
பரபரப்பு ஏற்பட்டது.