/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
/
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் வேண்டுகோள்
ADDED : பிப் 21, 2026 05:51 AM
கரூர்: போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, கோவை சாலையில் சின்னதாராபுரம் பிரிவில் ரவுண்-டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர்-கோவை சாலையில், சின்னதாராபுரம் பிரிவு உள்ளது. இந்த வழியாக நாள்தோறும் லாரிகள், பஸ்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் தாராபுரம், பழனி, பொள்ளாச்சி உள்ளிட்ட பகு-திகளுக்கு, ஆயிரக்கணக்கில் சென்று வருகின்-றன. இதனால், சின்னதாராபுரம் பிரிவில் அடிக்-கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் போலீசார், சின்னதாராபுரம் பிரிவில் பணியில் இருப்பது இல்லை. இதனால், அந்த பகுதியில் விபத்து ஏற்படும் பட்சத்தில், கோவை சாலையில், பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.இதனால், சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ஏற்-படும் விபத்துகளை தவிர்க்க, ரவுண்டானா அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகின்-றனர். ஆனால், நெடுஞ்சாலை துறை நிர்வாகம் பொதுமக்கள் கோரிக்கையை கண்டு கொள்ள-வில்லை.கோவை சாலை சின்னதாராபுரம் பிரிவு பகு-தியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல்-வேறு கிராமப்பகுதிகளில் இருந்து, செல்லும் பொதுமக்கள் சின்னதாராபுரம் பிரிவு வழியாக, பல்வேறு பகு-திகளுக்கு செல்கின்றனர். அப்போது, கோவை சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்தில் சிக்கி கொள்கின்றனர். இதனால், சின்னதாராபுரம் பிரிவு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும்.

