/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அதிகரிக்கும் பனிப்பொழிவு பொதுமக்கள் கடும் அவதி
/
அதிகரிக்கும் பனிப்பொழிவு பொதுமக்கள் கடும் அவதி
ADDED : டிச 21, 2025 07:02 AM

கரூர்: கரூரில், கடும் பனிப்பொழிவு அதிகரித்துள்-ளதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.தமிழகத்தில் அக்., முதல் டிச., வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவ மழைதான் சம்பா சாகுபடிக்கும், கோடைகால நீர் தேவைக்கும் உதவியாக இருந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. தற்போது அதிகாலை நேரங்களில் பனிப்பொ-ழிவின் தாக்கம் அதிகரித்துள்ளது.வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகுதான் பனிப் பொழிவு இருக்கும். ஆனால், பருவமழை சீசனிலேயே பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிக-ரித்து வருகிறது.
அதிகாலை 4:00 முதல் காலை 7:00 மணி வரை பனியின் தாக்கம் கடுமையாக உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவியர், முதியோர், வேலைக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சில இடங்களில், எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத வகையில் பனி மூட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

