தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சரியான நேரத்துக்கு பஸ்களை இயக்க மக்கள் வேண்டுகோள்

சரியான நேரத்துக்கு பஸ்களை இயக்க மக்கள் வேண்டுகோள்

சரியான நேரத்துக்கு பஸ்களை இயக்க மக்கள் வேண்டுகோள்


ADDED : மார் 07, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள புஞ்சைகாளக்குறிச்சி, மேகரை, வெங்கக்கல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பஸ்கள் சரியான நேரத்தில் வராததால், அப்பகுதி மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர்.

கரூரிலிருந்து வெங்கக்கல்பட்டி நோக்கி தினமும் தனியார் பஸ்கள், மேலும் சில அரசு பஸ்களும் இப்பகுதியில் இயக்கப்பட்டு வருகின்றன. எனினும், சில பஸ்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வருவதில்லை என, மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக காலை 9:30 மணிக்கு வர வேண்டிய தனியார் பஸ் புஞ்சைகாளக்குறிச்சி, மேகரை, வெங்கக்கல்பட்டி பகுதிக்கு வராமல், நஞ்சைகாளக்குறிச்சி பகுதியில் இருந்து நேரடியாக கரூர் சென்று விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நேரத்தில் பஸ் வராததால், மருத்துவ தேவை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடியாமல் இப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அட்டவணைப்படி பஸ்கள் புஞ்சைகாளக்குறிச்சி, மேகரை, வெங்கக்கல்பட்டி பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us