/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாரிகளை புறவழிச்சாலை வழியாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
/
லாரிகளை புறவழிச்சாலை வழியாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
லாரிகளை புறவழிச்சாலை வழியாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
லாரிகளை புறவழிச்சாலை வழியாக இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
ADDED : டிச 14, 2025 08:57 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரி-களை, புறவழிச்சாலையில் சென்று வர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரவக்குறிச்சியிலிருந்து சென்னை, நாகூர், வேலுார், கரூர், திண்டுக்கல், பழனி, தாராபுரம், கோவை, திருச்சி, மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான பஸ்கள் செல்கின்றன. இந்நிலையில், அரவக்கு-றிச்சி நகர பகுதியில் கனரக லாரிகள், சரக்கு லாரிகளின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால் லாரிகள், பஸ்கள் என அனைத்து வாக-னங்களும் நகருக்குள் வந்து செல்வதால், அடிக்-கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில நேரங்களில் விபத்தும் ஏற்படுகிறது.
மேலும் காலை, மாலை வேளைகளில் பள்ளி, கல்லுாரி வாகனங்களும் செல்வதால் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, அரவக்கு-றிச்சி நகருக்குள் வந்து செல்லும் லாரிகள் அனைத்தையும், புறவழிச்சாலையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

