ADDED : பிப் 20, 2026 05:36 AM
குளித்தலை: குளித்தலை சட்டசபை தொகுதி கிருஷ்ணராய-புரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் லாலாப்பேட்டை மாரியம்மன் கோவிலில் ஒன்-றிய செயலாளர் ராஜா தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து கூட்டணி கட்சி பொறுப்பாளர்க-ளுடன் இணைந்து லாலாப்பேட்டை, காந்தி சிலை, விட்டு கட்டி, கடைவீதி உள்ளிட்ட பகுதி-களில் கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், பயணிகளிடம் இல்லம் தோறும் இரட்டை இலை என்ற சுவரொட்டியை வழங்கி, அ,தி.மு.க.,வுக்கு ஓட்டு சேகரித்தனர். இதேபோல் குளித்தலை நகராட்சி பகுதிகளான தேவதானம், சுங்ககேட் ஆகிய பகுதிகளில் நகர செயலாளர் மணிகண்டன் தலைமையில், துண்டு பிரசுரங்களை வழங்கி ஓட்டு சேக-ரிப்பில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் குளித்-தலை ஒன்றிய செயலாளர் கருணாகரன், மாவட்ட பொருளாளர் கண்ணதாசன், கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

