/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மந்தமான நிலையில் புதுப்பட்டி சாலை பணி
/
மந்தமான நிலையில் புதுப்பட்டி சாலை பணி
ADDED : மே 29, 2025 01:29 AM
கிருஷ்ணராயபுரம், புதுப்பட்டி சாலை பணி மந்தமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கருப்பத்துார் பஞ்சாயத்து புதுப்பட்டி முதல், தாளியாம்பட்டி வரை தார் சாலை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சாலையை புதுப்பிக்க பூமி பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து பொக்லைன் கொண்டு சாலை பறிக்கப்பட்டது.
பின்னர் ஜல்லி கற்கள் கொண்டு சாலை பணி நடந்தது. புதுப்பட்டி சாலை அருகில் சாலை தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. தற்போது, சாலை அமைக்கும் பணி துவங்காமல், கிடப்பில் இருப்பதால் வாகனங்களில் செல்வோர், சிதறும் ஜல்லி கற்களால் சிரமப்படுகின்றனர். பள்ளி திறப்பதற்கு முன், தார்ச்சாலை பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

