/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி: பக்தர்கள் தரிசனம்
/
வெங்கடரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி: பக்தர்கள் தரிசனம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி: பக்தர்கள் தரிசனம்
வெங்கடரமண சுவாமி கோவிலில் புஷ்பாஞ்சலி: பக்தர்கள் தரிசனம்
ADDED : அக் 24, 2024 01:13 AM
வெங்கடரமண சுவாமி கோவிலில்
புஷ்பாஞ்சலி: பக்தர்கள் தரிசனம்
கரூர், அக். 24-
தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழாவையொட்டி, நேற்று புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா கடந்த, 4ல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் இரவு சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலா நடந்தது.
கடந்த, 10ல் திருக்கல்யாண உற்சவம், 12ல் தேரோட்டம், கடந்த, 20ல் வெள்ளி கருட வாகனத்தில் உற்சவர் ஊர்வலம், 21ல் முத்து பல்லாக்கு உற்சவம், 22ல் ஆளும் பல்லாக்கு உற்சவம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.
நேற்று மதியம், கோவில் மண்டபத்தில் கல்யாண வெங்கடரமண சுவாமி உற்சவர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சம்பங்கி, முல்லை, அரளி, துளசி, ரோஜா உள்ளிட்ட வண்ண பூக்களால் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர். பிறகு பக்தர்களுக்கு துளசி, மஞ்சள் மற்றும் பூக்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
டென்ஷனான வேல்முருகன்
கரூர் மாவட்டத்தில், சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் குழுவினர், புகழூர் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தில், 10 கோடி ரூபாய் மதிப்பில் நடக்கும் மேம்பாட்டு பணிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது அதிகாரிகள், ஆங்கிலத்தில் பேசினர். மேலும், அங்குள்ள விளக்க பலகையும் ஆங்கிலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதனால், டென்ஷனான வேல்முருகன், 'இது தமிழ்நாடு, இங்கு வந்துள்ள அனைவரும் தமிழகத்தின் மக்கள் பிரதிநிதிகள், தமிழில் பேசுங்கள், தமிழுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்' என, அதிகாரிகளிடம்
அறிவுறுத்தினார்.

