/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதர் மண்டி கிடக்கும்பாசன வாய்க்கால்
/
புதர் மண்டி கிடக்கும்பாசன வாய்க்கால்
ADDED : மார் 03, 2024 01:10 AM
கரூர்;கரூர், ஆண்டாங்கோவில் ராஜவாய்க்கால் புதர் மண்டி கிடக்கிறது.
அமராவதி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும், முக்கிய வாய்க்கால்களில் ராஜ வாய்க்கால் முதன்மையானதாகும். இப்பகுதியில் இருந்து கரூர் மாவட்டத்தில், 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெல், கரும்பு, வாழை, கோரைப்புல் மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மழை காலத்தில் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கும் போது ராஜ வாய்க்கால் மற்றும் துணை வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும்.
அப்போது, முழுமையாக தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு வாய்க்கால்கள் ஆகாய தாமரை, கருவேல முட்செடிகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பழைய சாக்கு வீடுகளில் கொட்டப்படும் கழிவுகள், வாய்க்கால்களை அடைத்து தண்ணீர் செல்ல முடியாதபடி உள்ளது. எனவே வாய்க்கால்களில் தண்ணீர் முறையாக செல்ல முடியாமல் தடுக்கும் ஆகாயத்தாமரை மற்றும் பிற கழிவுகளை அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

