கட்டட பணிகள் முடிந்தும் திறக்கப்படாத ப.வேலுார் ஜி.ெஹச்.,
கட்டட பணிகள் முடிந்தும் திறக்கப்படாத ப.வேலுார் ஜி.ெஹச்.,
ADDED : ஜூலை 24, 2026 06:09 AM
ப.வேலுார்:ப.வேலுார்
அரசு மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவு கட்டட பணிகள்
நிறைவடைந்த நிலையில், கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.
ப.வேலுார்
அரசு தலைமை மருத்துவமனையில் பாலப்பட்டி, நன்செய் இடையார், ப.வேலுார்,
பரமத்தி, கந்தம்பாளையம், கபிலர்மலை, பொத்தனூர், பாண்டமங்கலம்,
வெங்கரை, ஜேடர்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை
பெற வருகின்றனர். தாலுக்கா தலைமை மருத்துவமனையாக செயல்படுவதால்
நாள்தோறும், 500 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர். 80 பேர்
உள் நோயாளிகளக சிகிச்சை பெறுகின்றனர்.
இங்கு விபத்து அவசர
சிகிச்சை, குழந்தைகள் நலம், பல் மற்றும் சிறப்பு சிகிச்சை, எலும்பு
முறிவு, கண் மருத்துவம், காசநோய், ரத்த வங்கி, பொது மருத்துவம், 24 மணி
நேர தாய் சேய் நல சிகிச்சை, பச்சிளம் குழந்தை கவனிப்பு, எக்ஸ்ரே, ஸ்கேன்,
காது மூக்கு, தொண்டை, இ.சி.ஜி., சித்த மருத்துவம், அறுவை சிகிச்சை,
குடும்பம் நலம் உள்ளிட்ட 28 பிரிவுகள் உள்ளன.
ப.வேலுார் அரசு தலைமை
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நாளுக்கு நாள் எண்ணிக்கை
அதிகரித்து வருவதால் இடம் பற்றாக்குறையால் இங்கு முதலுதவி மற்றும்
பெற்றுக்கொண்டு தீவிர சிகிச்சைக்கு நாமக்கல் மற்றும் கரூர் அரசு
மருத்துவமனைக்கு செல்லும் நிலை உள்ளது.
இந்நிலையில், அரசு
மருத்துவமனை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்தது. கடந்த தி.மு.க.,
ஆட்சியின்போது,சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை ஒப்புதலின் படி,
பொதுப்பணித்துறை சார்பில் ப.வேலுார் அரசு மருத்துவமனை வளாகத்தில்,
50 படுக்கை வசதி கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம் கட்டுப்பணி, 20
கோடி மதிப்பீட்டில் கடந்த 2024 அக்., பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள்
தொடங்கப்பட்டபோதே, 2025 க்குள் கட்டடம் கட்டும் பணி முடிக்க வேண்டும்
என ஒப்பந்ததாரர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
தற்போது
ப.வேலுார் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டடம்
கட்டிப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கட்டடம் திறக்கப்படாமல்
உள்ளது.
புதிய கட்டடம், 4 தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளத்தில் பொதுமக்கள் காத்திருப்பு அறை, காவல்துறை விசாரணை அறை,
சி.டி., ஸ்கேன் அறை, விபத்தில் சிக்கிய நபர்களுக்கு உடனடியாக
சிகிச்சை அளிக்கும் நோயாளிகள் அறையும், முதல் தளத்தில் அறுவை சிகிச்சை,
ஊசி போடும் அறை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் கொடுக்கும்
அறையும், இரண்டாவது தளத்தில் அறுவை சிகிச்சை அறை, தீவிர சிகிச்சை
பிரிவும் கட்டி முடிக்கப்பட்டது. பணிகள் அனைத்தும் நிறைவடைந்த
நிலையில் திறப்பு விழா காணாமல் உள்ளது. விரைவில் திறப்பு விழா நடத்தி
மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
