/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம்
/
நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : ஏப் 27, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை மற்றும் புகழூர் காகித ஆலை சார்பில், வெறி நோய் தடுப்பூசி முகாம், வேலாயு-தம்பாளையத்தில் நடந்தது.
முகாமை, புகழூர் நகராட்சி தலைவர் குண சேகரன் தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து, புகழூர் நகராட்சி பகுதிகளில் வீடுகள், விவசாய தோட்டங்களில் வளர்க்கப்படும், 300 க்கும் மேற்பட்ட நாய்களுக்கு முகாமில் வெறி நோய் தடுப்பூசி போடப்-பட்டது.காகித ஆலை முதன்மை மேலாளர் சிவக்குமார், கால்நடை பரா-மரிப்பு துறை உதவி இயக்குநர் லில்லி அருள்குமாரி, கால்நடை மருத்துவர்கள் கண்ணன், கோபிநாத், சுமதி பங்கேற்றனர்.

