/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ஜூலை 2 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்'
/
'ஜூலை 2 முதல் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்'
ADDED : ஜூன் 25, 2025 01:43 AM
கரூர், 'கரூர் மாவட்டத்தில், கோ மாரி நோய் தடுப்பூசி முகாம், வரும், 2 முதல் தொடங்குகிறது' என, கலெக்டர்
தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சங்கம் இணைந்து, வரும் ஜூலை, 2 முதல், 22 வரை, 21 நாட்களுக்கு பசு, எருமை இனங்களுக்கு இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடக்க உள்ளது. அதன்பின், ஜூலை, 23 முதல், 31 வரை விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்படும். கோமாரி நோய், இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல், கொப்பளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்றாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு, பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர், சாணம், பால் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் நோய் எளிதில் பரவுகிறது. கோமாரி நோயால் மாடுகள் சினை பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பிறக்கம், எருதுகளின் வேலை திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு, கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு நேரிடுகிறது. இதுபோன்ற இழப்புகளை தடுக்க, கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.