/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லட்சுமணம்பட்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
/
லட்சுமணம்பட்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
லட்சுமணம்பட்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
லட்சுமணம்பட்டி கிராமத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
ADDED : டிச 31, 2024 07:20 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, பழையஜெயங்கொண்டத்திற்கு உட்பட்ட லட்சுமணம்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டம் மூலம், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.
பசு மாடுகளுக்கு அதிக காய்ச்சல், வாய் மற்றும் நாக்கில் புண்கள், மடி பகுதி கொப்புளம், இளங்கன்று இறப்பு, சினை மாடுகள் கருச்சிதைவு, மாடுகள் அதிகமாக மூச்சுவாங்குதல், உடல் வளர்ச்சி, பால் உற்பத்தி குறைதல், சினை பிடிப்பதில் தாமதம் போன்ற பாதிப்புகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. நேற்று நடந்த முகாமில், 50க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவ அலுவலர் கோகுல் தலைமையில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது.