/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
/
புகழூரில் வெறிநோய் தடுப்பூசி முகாம்
ADDED : அக் 02, 2025 01:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில், புகழூர் நகராட்சி அலுவலகம் அருகே, வெறி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.
அதில் புகழூர், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட வளர்ப்பு பிராணி நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி போடப்பட்டது. நிகழ்ச்சியில், விலங்குகள் நல வாரிய உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், புகழூர் நகராட்சி தலைவர் குணசேகரன், கால்நடை மருத்துவமனை டாக்டர் கண்ணன், முத்துக்குமார், செந்தில், துப்புரவு ஆய்வாளர் வள்ளி ராஜ் உள்பட, பலர் பங்கேற்றனர்.