/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
/
கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
ADDED : ஜூலை 24, 2025 01:26 AM
கரூர், விடுபட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வரும், 31 வரை விடுபட்ட கால்
நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோமாரி நோய் இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்புளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர், சாணம், பால் மற்றும் பண்ணை கழிவுகள் மூலம் இந்நோய் எளிதில் பரவுகிறது.
கோமாரி நோயினால் மாடுகளில், சினைப்பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல் ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு நேரிடுகிறது. தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 6 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் கால்நடை நிலையங்களின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில், 75 குழுக்கள் மூலம், 4 மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.