/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா
/
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு - கேது பெயர்ச்சி விழா
ADDED : ஏப் 27, 2025 04:19 AM
கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், ராகு - கேது பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
நவக்கிரகங்களில் ராகு - கேது ஆகிய கிரகங்கள் ஒன்றரை ஆண்-டுகளுக்கு ஒருமுறை, இடப் பெயர்ச்சி ஆகும். ஒன்றரை ஆண்டு-களுக்கு பிறகு நேற்று, ராகு மீன ராசியில் இருந்து, கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடப்-பெயர்ச்சி ஆகினர்.
அதையொட்டி, கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் கடந்த, 24ல் விநாயகர் வழிபாடுடன் ராகு - கேது பெயர்ச்சி விழா தொடங்கியது. நேற்று முன்தினம் நவக்கிரக அபிேஷகம், லட்சார்ச்சனை நடந்தது.
நேற்று காலை, 8:00 மணிக்கு ராகு - கேதுவுக்கு மூலமந்திரம், யாகம், அஸ்திர ேஹாமம், சிறப்பு அபிேஷகம், கலசாபிே-ஷகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.பிறகு, மாலை, 4:20 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சிக்கு பிறகு, மஹா தீபாராதனை நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் சுவா-மியை வழிபட்டனர். பிறகு, பிரசாதம் வழங்கப்பட்டது.