தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பாதிப்பு

ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பாதிப்பு

ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியதால் பாதிப்பு


ADDED : செப் 15, 2026 07:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2026 07:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளித்தலை:ரயில்வே குகை வழிப்பாதையில் தண்ணீர் தேங்கியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குளித்தலை அருகே ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி - --பரளி நெடுஞ்சாலையில், ரயில்வே குகை பாதை உள்ளது. இதில் பணி நிறைவு பெறாத நிலையில் உள்ளது. குகை வழி பாதையில் இரு புறங்களிலும் பாசன கண்ணாறுகள் உள்ளதால், தண்ணீர் ஊற்று எடுத்து குகை வழிப்பாதையில், கடந்த இரண்டு நாட்களாக, 2 அடி உயரத்திற்கு தேக்கமடைந்துள்ளது.

இதனால் மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் குகை வழி பாதையில் பயணித்த மக்களின், இரு சக்கர வாகனங்கள் பழுது ஏற்பட்டு நின்று விடுகிறது. மேலும் பாசன கண்ணாறில் அதிகளவு தண்ணீர் வருவதால், இங்கு தண்ணீர் ஊற்று எடுத்து கொட்டுகிறது. இதேபோல், குளித்தலை நகராட்சி மணத்தட்டை ரயில்வே குகை வழி பாதையிலும், தண்ணீர் அதிகளவு ஊற்றெடுத்து தேங்கி உள்ளது.

இரண்டு குகை வழி பாதையிலும் உள்ள தண்ணீர் எடுக்கும் மோட்டார், பழுது ஏற்பட்டதால் வெளியேற்ற முடியவில்லை என கூறப்படுகிறது. எனவே, மக்கள் நலன் கருதி தண்ணீர்பள்ளி, மணத்தட்டை ஆகிய இரண்டு குகைவழி பாதையிலும் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us