ADDED : ஜூலை 09, 2026 05:06 AM
கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை
ரயில்வே கேட் மூடப்பட்டதால், அருகில் சிறிய அளவிலான சுரங்கப்பாதை
அமைக்கப்பட்டது. அதன் வழியாக வாகனங்கள் செல்கின்றன. மழை நீர்
தேங்கும் நேரங்களில் வாகன ஓட்டுனர்கள் செல்வதில்
சிரமப்படுகின்றனர்.
சுரங்கப்பாதையை மேம்படுத்த கோரி,
இப்பகுதி மக்கள் ரயில்வே நிர்வாகத்திடம் மனு அளித்தனர். அதன்படி,
ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை விரிவாக்கம் செய்து பஸ், லாரி செல்லும்
வகையில், மீண்டும் புதிய தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கி நடந்து
வருகிறது.
இப்பணி மந்தமாக நடப்பதால், குறைவாக உள்ள இடவசதியை
கொண்டு வாகன ஓட்டிகள் செல்லும் போது சிரமப்படுகின்றனர். விரிவாக்க
பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலை கிடப்பில் உள்ளது.
இதனால்,
மழை காலங்களில் நீர் தேங்கி அந்த வழியாக செல்ல முடியாத நிலை
உருவாகியுள்ளது. எனவே, சுரங்கப்பாதை விரிவாக்க பணியை
விரைவுப்படுத்தி, சாலை அமைத்து மழைநீர் செல்லும் வகையில் பணிகள்
மேற்கொள்ள வேண்டும்.
