ADDED : அக் 16, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாவட்டத்தில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை, பல பகுதிகளில் மழை பெய்துள்ளது
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கேரளா மாநிலம் மற்றும் தென் தமிழகத்தின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்ய தொடங்கிய மழை, நேற்று காலை, 8:30 மணி வரை நீடித்தது. நேற்று வரை பெய்த மழையளவு விபரம்: தோகைமலை, 7.60, கிருஷ்ணராயபுரம், 3.50, பஞ்சப்பட்டி, 3.60, மயிலம்பட்டி, 6 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 1.98 மி.மீ., மழை பதிவானது.