/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மழையால் செடிகளில் பாதிப்பு தக்காளி விலை திடீர் உயர்வு
/
மழையால் செடிகளில் பாதிப்பு தக்காளி விலை திடீர் உயர்வு
மழையால் செடிகளில் பாதிப்பு தக்காளி விலை திடீர் உயர்வு
மழையால் செடிகளில் பாதிப்பு தக்காளி விலை திடீர் உயர்வு
ADDED : ஜூலை 17, 2025 02:10 AM
கரூர், மழையால், தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்ந்து விட்டதால், வரத்து குறைந்துள்ளது. இதனால், தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது இதனால், தக்காளி செடிகளில் பூக்கள் உதிர்ந்துள்ளதால், வரத்து குறைந்து விட்டது. இதனால், தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
இதுகுறித்து, கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி சந்தை வியாபாரிகள் கூறியதாவது:
தொடர் மழையால் தக்காளி செடிகள் அழுகி, பூக்கள் உதிர்ந்து விட்டன. இதனால், தென் மாவட்டங்களின் முக்கிய சந்தையாக உள்ள திண்டுக்கல் ஒட்டன் சத்திரம், அய்யலுார் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. மேலும், கரூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால், தக்காளி சாகுபடி குறைந்துள்ளது.
இதனால், கரூர் உழவர் சந்தை, காமராஜ் தினசரி சந்தைக்கு குறைந்தளவே தக்காளியே கொண்டு வரப்படுகிறது. வரத்து குறைவால் கடந்த மாதம், 16 ரூபாய் வரை விற்ற, ஒரு கிலோ பெரிய ரக தக்காளி, தற்போது, 28 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. சிறிய அளவிலான தக்காளி, 20 ரூபாயில் இருந்து, 23 ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.