ADDED : ஜூன் 22, 2026 04:22 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில், நேற்று மாலை பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
வடக்கு
கேரளா பகுதி மற்றும் வடக்கு லட்சத்தீவு பகுதிகளில், வளிமண்டல
காற்றழுத்த சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை
பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
அதன்படி,
கரூர் டவுன், திருமாநிலையூர், சுங்ககேட், செல்லாண்டிப்பாளையம்,
வெங்கமேடு, தான்தோன்றிமலை, காந்தி கிராமம், பசுபதிபாளையம்,
திருக்காம்புலியூர் உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளில், நேற்று மாலை
குளிர்ந்த காற்றுடன் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. மேலும், கரூர்
மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை, கடந்த, 24 மணி நேரத்தில்
குளித்தலையில், 4 மி.மீ., தோகைமலையில், 21 மி.மீ., மழை பெய்தது.
மாயனுார் கதவணை
கரூர்
அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி
தண்ணீர் வரத்து, 205 கன அடியாக இருந்தது. அந்த தண்ணீர் முழுவதும்
காவிரியாற்றில் திறக்கப்பட்டது.
தென்கரை வாய்க்கால், கீழ்கட்டளை வாய்க்காலில், கிருஷ்ணராயபுரம் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி
ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி
அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம்,
2.98 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
