/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சாலையில் மழைநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
/
சாலையில் மழைநீர் தேக்கம்: வாகன ஓட்டிகள் தவிப்பு
ADDED : மே 24, 2024 06:44 AM
கரூர் : கரூரை சுற்றி கோடை மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கரூர், ஆண்டாங்கோவில் சாலையில் குளம் போல மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு இருந்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளதாக புகார்கள் வந்ததை தொடர்ந்து, உள்ளாட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து பொக்லைன் இயந்திரம் மூலம், தேங்கியிருந்த மழைநீரை வெளியேற்றி வருகின்றனர். தினமும் இரவு நேரத்தில் மழை பெய்து வருவதால், பல இடங்களில் நீர் வடிய பல நாட்களாகும்.* கிருஷ்ணராயபுரம் அடுத்த, கோவக்குளம் அரசு தொடக்கப்பள்ளி அருகில் மாநில நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக கோவக்குளம், பிச்சம்பட்டி, கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம் பகுதிகளுக்கு மக்கள் சென்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சாலையோரத்தில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் சாலையில் தேங்கி குளம் போல் உள்ளது. வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.