ADDED : ஜூன் 03, 2026 04:09 AM

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
அக்னி நட்சத்திரம், கடந்த மே, 4ல் தொடங்கி, கடந்த, 28ல் நிறைவடைந்தது. ஆனால், கடந்த, மூன்று நாட்களாக கரூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் சராசரியாக, 100 முதல், 103 டிகிரி பாரன்ஹீட் வரை இருந்தது. மேலும், சில நாட்களாக கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.இந்நிலையில், நேற்று மாலை, 4:30 முதல், 5:00 மணி வரை கரூர் டவுன், திருக்காம்புலியூர், வெங்கமேடு, பசுபதிபாளையம், சுங்ககேட், தான்தோன்றிமலை, காந்தி கிராமம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குளிர்ந்த காற்றுடன் சிறிது நேரம் மழை பெய்தது. இதனால், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தில் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், குளிர்ந்த காற்றால் சற்று ஆறுதலடைந்தனர்.
