ADDED : மே 18, 2026 01:40 AM

கரூர்:கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, குளிர்ந்த காற்றுடன் மழைபெய்தது.
கோடைகாலத்தில்
அக்னி நட்சத்திரம், கடந்த, 4ல் தொடங்கியது. கரூர் மாவட்டத்தில்
கடந்த, 2024ல் அதிகபட்சமாக கோடை வெயில், 110 டிகிரி பாரன்ஹீட் வரை
இருந்தது. கடந்த, 2025 ஆண்டைபோல், நடப்பாண்டு மழை பெய்ய
தொடங்கியதால், கோடை வெயில் கடந்த, 15 நாட்களில், 105.9 டிகிரியை
தாண்டவில்லை. மேலும், கடந்த சில நாட்களாக கரூர் மற்றும் சுற்று வட்டார
பகுதிகளில், இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில்,
நேற்று மாலை, 4:00 மணி முதல், 4:30 மணி வரை கரூர் டவுன் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது,
கோவை சாலை, திருச்சி சாலை, ஜவஹர் பஜார் பகுதிகளில் மழைநீர் சாலையில்
ஓடியது. இதனால், அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்தில் அவதிப்பட்டு
வந்த பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.
மாயனுார் கதவணை
கரூர்
அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர்
வரத்து வினாடிக்கு, 440 கன அடியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக, அந்த
தண்ணீர் முழுவதும் காவிரியாற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன
வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. ஆத்துப்பாளையம் அணை கரூர்
மாவட்டம், க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று
காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து நின்றது. 26.90 அடி உயரம்
கொண்ட அணை நீர்மட்டம், 3.13 அடியாக இருந்தது. நொய்யல் பாசன
வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மழை நிலவரம்
கரூர்
மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த
மழையளவு(மி.மீ.,) குளித்தலை, 8, தோகைமலை, 7.20, கிருஷ்ணராயபுரம்,
17, மாயனுார், 9, பஞ்சப்பட்டி, 1.40, கடவூர், 4, பாலவிடுதி, 50,
மயிலம்பட்டி, 15 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும்
சராசரியாக, 9:30 மி.மீ., மழை பெய்தது.
