/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மயிலம்பட்டி, மாயனுாரில் குளிர்ந்த காற்றுடன் மழை
/
மயிலம்பட்டி, மாயனுாரில் குளிர்ந்த காற்றுடன் மழை
ADDED : மே 08, 2025 01:25 AM
கரூர், மே 8
மாயனுார், கிருஷ்ணராயபுரத்தில் நேற்று அதிகாலை வரை, குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது.
கரூர் மாவட்டத்தில், கோடைக்காலத்தை யொட்டி, கடந்த சில நாட்களாக, 100 முதல், 104 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், இரவு நேரத்தில் ஏற்படும் புழுக்கம் காரணமாக, பொதுமக்கள் துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில், 32.50 மி.மீ., மாயனுார், 10.40, குளித்தலை, 2 மி.மீ., மயிலம்பட்டி, 4 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும், சராசரியாக, 4.8 மி.மீ., மழை பதிவானது.
கரூர் மாவட்டத்தில், பல இடங்களில் சாரல் மழை பெய்த காரணத்தால், கோடை வெப்பத்தால் அவதிப்பட்டு வரும், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.