தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 'ரெயின் கோட்' விற்பனை ஜோர்

'ரெயின் கோட்' விற்பனை ஜோர்

'ரெயின் கோட்' விற்பனை ஜோர்


ADDED : டிச 03, 2024 02:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 03, 2024 02:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'ரெயின் கோட்' விற்பனை ஜோர்

கரூர், டிச. 2-

வங்க கடலில் ஏற்பட்ட, 'பெஞ்சல்' புயலால், கரூர் மாவட்டம் முழுதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், குளிர்ந்த காற்றுடன் மழையால் மக்கள் பல்வேறு சிரமங்களுககு உள்ளாகி வருகின்றனர். அதில், அவசர வேலைக்கு வெளியில் செல்பவர்கள், 'ரெயின் கோட்' அணிந்து செல்வது அவசியமாக உள்ளது.

இந்நிலையில், கரூர் திண்டுக்கல் சாலை, தான்தோன்றிமலை போன்ற பல்வேறு பகுதிகளில், 'ரெய்ன் கோட்' அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு, கோல்கட்டா, பெங்களூரு மொத்த வியாபாரிகளிடம் கொள்முதல் செய்து, சில்லரை விலையில் விற்பனை செய்கின்றனர். இதனை ஆர்வத்துடன் மக்கள் வாங்கி செல்கின்றனர். ஒரு கோட், 500 ரூபாய் முதல் தரத்துக்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us