கரூர் மாவட்டத்தில் நடப்பு செப்.,வரை 192.97 மி.மீ., மழை
கரூர் மாவட்டத்தில் நடப்பு செப்.,வரை 192.97 மி.மீ., மழை
ADDED : செப் 26, 2026 07:14 AM
கரூர்:''
கரூர் மாவட்டத்தில், நடப்பு செப்., மாதம் வரை, 192.97 மி.மீ., மழை
பெய்துள்ளது,'' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
கரூர்
மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில்
நேற்று நடந்தது. அதில், விவசாயிகள் தரப்பில் இருந்து எழுப்பப்பட்ட,
பல்வேறு கேள்விகளுக்கு அரசு துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.
பிறகு, கலெக்டர் முத்துக்குமரன் பேசியதாவது:
கரூர்
மாவட்டத்தில், இயல்பான ஆண்டு மழையளவு, 652.20 மி.மீ., நடப்பு செப்.,
மாதம் வரை, 192.97 மி.மீ., மழை பெய்துள்ளது. இயல்பான அளவை விட, 171.43
மி.மீ., மழை குறைவாக பெய்துள்ளது.
மேலும், கரூர் மாவட்டத்தில்
நெல், சிறுதானியங்கள், உணவு தானியங்கள், எண்ணை வித்துக்கள், கரும்பு
என, 5,788 ெஹக்டேரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், 4,257 ெஹக்டேர்
பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காய்கறி, பழங்கள்,
தோட்டப்பயிர்கள், மூலிகை பயிர்கள், மலர் பயிர்கள் என மொத்தமாக, 18
ஆயிரத்து, 877 ெஹக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், தேவையான அளவில்,
4,826 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில்,
டி.ஆர்.ஓ., விமல்ராஜ், துணை கலெக்டர் வெங்கடேஷ்வரன், வேளாண்மை இணை
இயக்குநர் மல்லிகா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்
அபிராமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாவித்திரி
உள்பட, அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
