/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாவட்டத்தில் விடிய விடிய மழை கரூரில் 53.60 மி.மீ., கொட்டியது
/
மாவட்டத்தில் விடிய விடிய மழை கரூரில் 53.60 மி.மீ., கொட்டியது
மாவட்டத்தில் விடிய விடிய மழை கரூரில் 53.60 மி.மீ., கொட்டியது
மாவட்டத்தில் விடிய விடிய மழை கரூரில் 53.60 மி.மீ., கொட்டியது
ADDED : ஆக 11, 2025 05:42 AM
கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. அதிக-பட்சமாக கரூர் வட்டாரத்தில், 53.60 மி.மீ., மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரண-மாக தமிழகத்தில், பல மாவட்டங்களில் மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் கடந்த, 8ல் அறிவித்திருந்தது.கரூரில், நேற்று முன்தினம் காலை, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நி-லையில், மாலை, 4:00 மணி முதல், 4:30 மணி வரை கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், காற்றுடன் கூடிய மழை விட்டுவிட்டு பெய்தது. பின், இரவு மீண்டும் தொடங்கிய மழை, நேற்று அதிகாலை வரை நீடித்தது.
* கரூர் மாவட்டத்தில், நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழைய-ளவு(மி.மீ.,) கரூர், 53.60, அரவக்குறிச்சி, 28.60, க.பரமத்தி, 2, குளித்தலை, 4.40, கிருஷ்ணராய-புரம், 40, மாயனுார், 16, பஞ்சப்பட்டி, 32, கடவூர், 12, பாலவிடுதி, 4, மயிலம்பட்டி, 12 ஆகிய அளவு-களில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 17.05 மி.மீ., மழை பதிவானது.