/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளி வளாகம் பின்புறம் மழைநீர் தேங்கியதால் சிரமம்
/
அரசு பள்ளி வளாகம் பின்புறம் மழைநீர் தேங்கியதால் சிரமம்
அரசு பள்ளி வளாகம் பின்புறம் மழைநீர் தேங்கியதால் சிரமம்
அரசு பள்ளி வளாகம் பின்புறம் மழைநீர் தேங்கியதால் சிரமம்
ADDED : அக் 08, 2025 01:54 AM
கிருஷ்ணராயபுரம்,;கிருஷ்ணராயபுரம் அடுத்த பிச்சம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி வளாகத்தின் பின்புறம் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால், குளம்போல் தேங்கி காணப்படுகிறது. இதனால், மாணவ, மாணவியர் சிரமத்துக்குள்ளாகின்றனர். பள்ளி வளாகம் அருகே உள்ள குடியிருப்புகளிலும், மழைநீர் தேங்கி தெப்பம் போல் காணப்படுகிறது.
மழைக்காலம் வந்தால், இப்பகுதி மக்கள் பெரும் பாதிப்பை சந்திந்து வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் நிரந்தரமாக மழைநீர் தேங்கமால் இருக்க, வடிகால் வசதி ஏற்படுத்தி மழைநீர் வடிந்து செல்லும் வகையில் பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.