/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளிக்குள் புகுந்த மழைநீர்; சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை
/
பள்ளிக்குள் புகுந்த மழைநீர்; சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை
பள்ளிக்குள் புகுந்த மழைநீர்; சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை
பள்ளிக்குள் புகுந்த மழைநீர்; சுற்றுச்சுவர் கட்டித்தர கோரிக்கை
ADDED : டிச 04, 2024 06:48 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த வைகைநல்லுார் பஞ்., கோட்டமேட்டில், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள, அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், பள்ளிக்குள் மழைநீர் புகுந்து குளம்போல் தேங்கியது. இதற்கு சுற்றுச்சுவர் இல்லாததே காரணம். மழைநீருடன், கழிவுநீரும் புகுந்ததால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மாணவ, மாணவியருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கட்டடங்கள் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே, பள்ளி வளாகத்திற்குள் மழைநீர் புகாத வண்ணம், சுற்றுச்சுவர் அமைத்தும், சேதமான கட்டடங்களை சீரமைத்தும் தரவேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால், நேற்று ஒருநாள் பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக, தலைமை ஆசிரியர் மாலதி அறிவித்தார்.