ADDED : நவ 25, 2026 05:36 AM
குளித்தலை; குளித்தலை ஊராட்சி ஒன்றியம், வைகைநல்லுாரில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மண்டல துணை வளர்ச்சி அலுவலர் சாந்தி பேரணியை தொடங்கி வைத்தார். வைகைநல்லுார் பஞ்.,செயலாளர் கதிர்வேல், கோட்டைமேடு அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர், பஞ்., கணினி ஆப்பரேட்டர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று, பின்னர் பள்ளி வந்தடைந்தது. பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு செய்வது மூலம் ஏற்படும் நன்மை குறித்து, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அரசு பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.* பொய்யாமணி பஞ்.,ல், நடந்த பேரணிக்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை லலிதா பேரணியை தொடங்கி வைத்தார். பஞ்., செயலாளர் லெனின் பழனி, மழைநீர் சேகரிப்பால் ஏற்படும் நன்மை குறித்து பேசினார். வி.ஏ.ஒ., கரும்பாச்சலம், பள்ளி தலைமை ஆசிரியர் முத்துலட்சுமி, ஊராட்சி பணியாளர்கள் தமிழரசி, ராஜலட்சுமி, ரம்யா, தேன்மொழி, ஆசிரியர் பூபதி மற்றும் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.
