ADDED : அக் 29, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, துத்திக்குளத்தில், 50 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்த கன மழையால், இந்த ஏரி நிரம்பியது. நிரம்பி வழிந்த தண்ணீர், வடிகால் மூலம் பொம்மசமுத்திரம்
ஏரிக்கு செல்லும் நிலையில், ஏரியின் அருகே உள்ள, 20க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில், தண்ணீர் புகுந்து தேங்கி காணப்படுகிறது.

